விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து!!

கனடாவின் ரொறன்ரோ சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் விமானமொன்று மற்றுமொரு ஜெட் விமானமொன்றில் மோதியதில் விமானத்தின் இறக்கை தீப்பற்றி எரிந்துள்ளது.எவ்வாறாயினும்,  விமானத்தில் பயணிக்கவிருந்த 168 பயணிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் 6 பேர் பாதிப்புக்கள் எதுவும் இன்றி காப்பாற்றப்பட்டுள்ளனர்.போயிங் 737 -800 ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.விமானம் மோதிய ஜெட் விமானத்தில் எவரும் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.ரொறன்ரோ சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 5 மாதங்களில் பதிவாகும் இரண்டாவது விபத்து இதுவாகும்.கடந்த ஓகஸ்ட் மாதம் கனடா மற்றும் போலாந்து ஜெட் விமானங்களின் இறக்கைகள் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் விமானங்கள் இரண்டும் கடுமையாக சேதமடைந்த நிலையில்  எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.