முல்லைத்தீவில் பரவும் காய்ச்சல்! மருத்துவ நிபுணர் அச்சமடையத் தேவையில்லை என்கிறார்!

முல்லைத்தீவு பகுதியில் பரவி வரும் காய்ச்சல் குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்று வடமாகாண சுகாதார அமைச்சின் சிறப்பு நிபுணர் மருத்துவ கலாநிதி ஆர்.கேசவன் தெரிவித்துள்ளார்.

feverமுல்லைத்தீவில் பரவி வரும் காய்ச்சலினால் சுமார் 10 பேர் வரை மரணமாகியுள்ளனர். இதனால் மக்கள் மத்தியில் அச்சமான நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள, வடமாகாண சுகாதார அமைச்சின் சிறப்பு நிபுணர் மருத்துவ கலாநிதி ஆர்.கேசவன்,

இன்புளுவென்சா ‘பி’  (Influenza B) வகை காய்ச்சலே இது என்று வட மாகாண சுகாதார அமைச்சின் சிறப்பு குழு,  அடையாளம் கண்டுள்ளது.

முல்லைத்தீவு பகுதியில் பரவி வரும் காய்ச்சல் குறித்து மக்கள் அச்சமடைய வேண்டியதில்லை.

இந்த நோய் குணப்படுத்தக் கூடியது என்றும், இலகுவில் கட்டப்படுத்தக் கூடியது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.