இந்தியாவில் மனைவியை தனது தம்பிக்கு திருமணம் செய்து வைத்த கணவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தின் பகல்பூரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. பவன் கோஸ்வானி என்பவருக்கும் பிரியங்கா என்ற பெண்ணுக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பவனின் தம்பி சஜனுடன் பிரியங்காவுக்கு காதல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பவனுக்கு தற்போது தெரியவர அவர் விபரீத முடிவை எடுத்தார்.
அதன்படி தனது குடும்பம் சண்டையிட்டு பிரியாமல் இருக்க மனைவியை தனது தம்பிக்கு திருமணம் செய்ய முடிவெடுத்தார்.
இதையடுத்து முறைப்படி பிரியங்காவுடன் பவன் விவாகரத்து பெற்று இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார்.
இந்த திருமணத்தில் ஊர் மக்களும், உறவினர்களும் கலந்து கொண்டனர்.
திருமணத்துக்கு பின்னர் பவன் அந்த ஊரை விட்டு வேறு இடத்துக்கு சென்றுவிட்டார்.
இதனிடையில், சஜனை இனி அப்பா என அழைக்க வேண்டும் என தனது குழந்தையிடம் பிரியங்கா கூறி வருவதோடு, நான் உண்மையாக சஜனை தான் நேசிப்பதாகவும் கூறியுள்ளார்.