இலங்கையைத் தேடித் தேடிச் செல்லும் வெளிநாட்டுப் பயணிகள்!!!

இலங்கையில் கடந்த 2017ம் ஆண்டு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. இதன்மூலம் கடந்த ஆண்டுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை 3.2 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.

201611161152093448_The-foreign-tourists-come-to-puducherry-and-helplessness_SECVPF2017 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 21 இலட்சத்து 16 ஆயிரத்து 407 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக குறிப்பிட்ட மேற்படி சபை, இலங்கையின் சுற்றுலா துறையின் சவால்மிக்க காலப்பகுதியாக கருதப்படும் 2017ம் ஆண்டில் இந்த அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும் என தெரிவித்துள்ளது.

இதேவேளை இலங்கையின் சப்ரகமுவ மாகாணத்தில் அமைந்துள்ள பின்னவல யானைகள் சரணாலயத்தால் கடந்த ஆண்டு அதிகளவான வருமானம் கிடைத்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்திச் சபையை மேற்கோள் காட்டி கடந்த வாரம் செய்தி வெளியாகியமை குறிப்பிடத்தக்கதாகும். இலங்கையின் எழில் நிறைந்த பிரதேசங்கள் சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் கவர்வது குறிப்பிடத்தக்கதாகும்.