கல்கிஸ்ஸ பிரதேசத்தில் முன்னெடுத்து செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதில் 6 பெண்கள் மற்றும் ஆண் ஒருவரும் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கு அமைய குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் அனுமதியுடன் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த ஆண் நபர், விபச்சார விடுதியின் முகாமையாளராக செயற்பட்டு வந்துள்ள நிலையிலே கைது செய்யப்பட்டுள்ளார்
உடபுஸ்ஸலாவ, கதபொல, கொட்டாவ, பல்லேபெத்த மற்றும் மன்னார் பிரதேசங்களினை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் இன்று கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.