நடிகையை தொடர்ந்து நடிகரையும் அசிங்கப்படுத்திய நடிகர் சங்கம்!!

நடிகர் சங்கம் சார்பில் நட்சத்திர கலைவிழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. ரஜினி, கமல் முன்னிலையில் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு மக்களிடமும் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இந்த நிகழ்ச்சிக்கு நடிகை ராதிகாவுக்கு நடிகர் சங்கம் அழைப்புவிடுக்கவில்லை என்பதை அண்மையில் அறிந்தோம். தற்போது பிரபல நடிகர் எஸ்.வி. சேகர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், வெளி நாட்டு நட்சத்திர கலைவிழாவை மிகச்சிறப்பாக ஒருவரைக்கூட அவமானப்படுத்தாமல், (ஏர்போர்ட் வரச்சொல்லி திருப்பி அனுப்பாமல்) சரிசமமாக மிக கவுரவமாக நடத்தி,நடிகர் சங்க கடனை அடைத்த விஜயகாந்த் அவர்களை ஏனோ இப்போது நினைக்க தோன்றுகிறது என பதிவு செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் தற்போது உள்ள நடிகர் சங்கம் அவமானப்படுத்தியதை தான் இவர் மறைமுகமாக கூறுகிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

CaptureNB NJV GKM