ஒன்றன் பின் ஒன்றாக இறப்பு.. நூற்றுகணக்கில் கொன்று குவிப்பு..!!

கர்நாடக மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழக எல்லைகளில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வாகனங்களுக்கு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

large_fhfhfhf-5259கர்நாடக மாநிலம், வடக்கு பெங்களூரு பகுதியில் சமீபத்தில் நாட்டுக்கோழி ஒன்று உயிரிழந்தது. அதைத் தொடர்ந்து, ஏராளமான கோழிகள் ஒன்றன் பின் ஒன்றாக இறந்தன.

இதன் காரணமாக கோழிகளை ஆய்வுசெய்ததில் பறவை காய்ச்சல் பாதிப்பால்இறந்தது தெரியவந்தது.இதையடுத்து பெங்களூரு மாநகராட்சிக்கு போபால் ஆய்வகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.

புவனேஸ்வரி நகரில் பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பெங்களூர் நகரில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான கோழிகள் கொன்று புதைக்கப் பட்டுள்ளன.

பெங்களூர் மாநகராட்சியின் ஏலகங்கா மண்டலத்தில் கோழி மற்றும் முட்டை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கர்நாடக மாநிலத்தில் பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவியதாக தகவல் இல்லை.

புவனேஸ்வரி நகரில் இறந்த கோழிகள் தமிழகத்திலிருந்து அங்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

அந்த தகவல் உண்மையா என்பதை உடனடியாக உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது.

பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்ட கோழிகள் எங்கிருந்து அனுப்பப்பட்டுள்ளன என்பதை உறுதி செய்து அப்பகுதியில் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைள், நோய் ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஒவ்வொரு நாளும் பெங்களூரிலிருந்து தமிழகத்திற்கு பல்லாயிரக் கணக்கானவர்கள் ரயில், பேருந்து மூலம் வருகிறார்கள். தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகளில் வருகிறவர்கள் அதிகம்.

தருமபுரி, சேலம், அரக்கோணம், வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரயில்கள் மூலம் வருவோர் அதிகம். எனவே இந்த இரண்டு தடங்களிலும் தீவிர சோதனை தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

ஏற்கனவே இது குறித்து தமிழக அரசுக்கு பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.