சீனாவின் கிழக்கு கடற்பகுதியில் எண்ணெய் ஏற்றிவந்த கப்பல் ஒன்று பிறிதொரு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் 32 பேர் காணாமல் போயுள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, காணமல் போன 32 பேரும் எண்ணெய் ஏற்றிவந்த கப்பலில் பயணித்த ஊழியர்கள் எனவும், மற்றைய கப்பலில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் சீன போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளதாக, அந்த நாட்டு ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் காணாமல் போன ஊழியர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.