தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி உயிர் நீத்த மாவீரர்களையும் முன்னாள் போராளிகளையும் பயன்படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் நடத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டினை கிளிநொச்சியில் உள்ளுராட்சி சபைத் தேர்தல் போது வேட்புமனுதாக்கல் நிராகரிக்கப்பட்ட சுயேட்சைக் குழு ஒன்று முன்வைத்துள்ளது.
கிளிநொச்சியில் உள்ளுராட்சி சபைத் தேர்தல் போது வேட்புமனுதாக்கல் நிராகரிக்கப்பட்ட முன்னாள் போராளியான வ.அன்னலக்ஸ்மி தலைமையிலான சுயேட்சைக் குழு நேற்று ஊடகசந்திப்பு ஒன்றை கிளிநொச்சி சோலைவணத்தில் நடத்தியது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் போராளியான வ.அன்னலக்ஸ்மி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்தார்.
அத்துடன் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்த எந்தவொரு அரசியல் தலைவர்களும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லையெனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.