கடலூரில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே இளைஞர் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊதிய உயர்வு தொடர்பாக போக்குவரத்து ஊழியர்கள் கடந்த 4 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசு அதிகாரிகள் தற்காலிக ஓட்டுனர்களை வைத்து பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.முறையான பயிற்சி இல்லாதா ஓட்டுநர்களும் பேருந்துகளை இயக்குவதால் ஆங்காங்கே விபத்துகள் ஏற்படுகின்றன.
அந்த வகையில், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே தற்காலிக ஓட்டுநர் இயக்கிய பேருந்து, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.இதில் வாகனத்தை ஒட்டு வந்த சியான் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மேலும் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 7 வயது சிறுமி சாரா, சாமுவேல் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் ஓட்டுநர் ஏழுமலையை பிடித்து தற்காலிக ஓட்டுனரா என விசாரித்து வருகின்றனர்.