இலங்கையின் வடபகுதியில் இருந்து சென்ற பக்தர்கள் இன்று சிதம்பரம் நடராஜர் கோவிலில் தரிசனம் செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், குறித்த இலங்கை பக்த அடியார்களுக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்துள்ள இலங்கையர்கள், சபரி மலைக்கு செல்லும் வழியில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
குறித்த பக்தர்களுக்கு பொது தீட்சிதர்கள் சார்பில் ஐய்யப்ப தீட்சிதர், கிருஷ்ணசாமி தீட்சிதர்கள் வரவேற்று கோவிலுக்கு அழைத்து சென்று சிறப்பு பூஜையில் பங்கேற்க வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.