லசந்த கொலை செய்யப்பட்மைக்கு அமைச்சர் வெளியிட்ட காரணம்?

கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற முறைகேடான திட்டம் ஒன்றை அறிந்து வைத்திருந்த காரணத்தினாலேயே சன்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறியுள்ளார்.

00112கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 71வது மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “கடந்த அரசாங்கத்தில் உக்ரைன் நாட்டுடன் முறைகேடான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படவிருந்தது. இதனை லசந்த விக்ரமதுங்க அறிந்து வைத்திருந்தார்.

இதன் காரணமாகவே, குறித்த உடன்படிக்கை கைச்சாத்திடுவதற்கு முன்னர் லசந்த கொலை செய்யப்பட்டார். 2008ஆம் ஆண்டு அவர் அலுவலகத்திற்கு சென்ற போது கொலை செய்யப்பட்டார்” என அமைச்சர் கூறியுள்ளார்.