மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன முன்னணியில் போட்டியிடுவதற்கு விண்ணப்பித்த நடிகை ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக நடிகை மதுஷா ராமசிங்க தகவல் வெளியிடுகையில்,
‘ நடிப்பைக் கைவிட்டு விட்டு அரசியலில் ஈடுபட முடிவு செய்தேன். உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணியில் போட்டியிட அணுகினேன்.
வேட்புமனுக் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கு மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமான ஒருவர் என்னிடம் பாலியல் இலஞ்சம் கோரினார்.
வேட்பாளர் பட்டியலில் இடம்பெற வேண்டுமானால் நிர்வாணமாக இருக்க வேண்டும் என்று அந்த அதிகாரி கூறினார்.
இதுபற்றி மகிந்த ராஜபக்சவிடம் எடுத்துக் கூறினேன். அவர் சாதாரணமாக எடுத்துக் கொண்டு வருத்தம் தெரிவித்தார். ஆனால் குறித்த நபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றும் அவர் கூறினார்.