பாவங்கள் விலக என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

6bb0a89d0a049d4aaa27ae8ba9cbc5f1இந்த உலகில் மனிதர்களாய் பிறந்த பெரும்பாலானோர் ஏதவது ஒரு பாவத்தை ஏதாவது ஒரு சூழ்நிலையில் செய்து கொண்டே தான் இருக்கிறார்கள்.இதில் சில பாவங்கள் அடுத்து பிறவி வரை கூட தொடர்கிறது. இதனால் மனிதர்களுக்கு பல துன்பங்கள் ஏற்படுகிறது. நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நம்மிடம் இருந்து விலகி செல்ல ஒரு பரிகாரம் இருக்கிறது.

இதற்கு இறை பக்தி மிகவும் முக்கியம். வாருங்கள் அந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்று பார்ப்போம்.சூரியோதயத்திற்கு முன்பு எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையில் ஒரு சிறிய உருளியை எடுத்துக் கொண்டு அதில் நல்லெண்ணெயையோ அல்லது நெய்யயோ முக்கால் பாகத்திற்கு ஊற்ற வேண்டும்.

பிறகு ஒரு துணி மூலம் திரித்த திரியை அதில் வைத்து தீபம் ஏற்ற வேண்டும். ஏற்றிய தீபத்தை கையில் ஏந்திக்கொண்டு அதில் திருப்பதி ஏழுமலையான் ஒளி வடிவில் இருப்பதாக மனதில் நினைத்துக்கொண்டு நான் செய்த பாவங்கள் அனைத்திலும் இருந்து என்னை காத்தருள்வாய் இறைவா என்று அவரை மனதார வேண்டிக்கொள்ள வேண்டும்.

பிறகு மாவிளக்கு, சர்க்கரைப் பொங்கல், வடை, எள் சாதம் போன்றவற்றை சாமிக்கு படைக்க வேண்டும். அதன் பிறகு மலர்கள் மற்றும் துளசியை தூவி ஏழுமலையான் குறித்த திவ்ய பிரபந்தப் பாடல்களை பாட வேண்டும். காலையில் ஏற்றப்பட்ட இந்த தீபம் மாலைவரை அணையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பிறகு ஏழை எளிய மக்களுக்கு ஆடைகளை தானமாக கொடுக்கவேண்டும் (அவர்கள் நம்மை வாழ்த்துவது போலான ஆடைகளாக அவை இருக்க வேண்டும்).

இதில் எதையுமே ஏனோ தானோ என்று செய்யாமல் மனதார செய்ய வேண்டும். இதானால் நம்முடைய பூர்வ ஜென்ம பாவங்கள் அனைத்தும் விலகி நல்ல பலன்கள் கிடைக்கும்.