3 நாடுகளை வாடகை டாக்ஸியில் சுற்றிவந்த நபர்!!

டென்மார்க்கில் இருந்து புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக கேப் ஒன்றை வாடகைக்கு எடுத்த நபர் ஒருவர் 370 மைல்கள் பயணம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

22-1495448050-cab-rides-to-get-cheaper-under-gst1டென்மார்க்கின் Copenhagen பகுதியில் இருந்து கேப் ஒன்றை வாடகைக்கு எடுத்த குறித்த நபர் நார்வேயின் ஓஸ்லோ செல்லும் வழியில் புத்தாண்டை கொண்டாடியுள்ளார்.

அங்கிருந்து ஸ்வீடன் வழியாக நார்வே தலைநகரில் அமைந்துள்ள Abildsø பகுதியில் உள்ள தமது குடியிருப்புக்கு குறித்த வாகனத்தில் சென்ற அவர் வாடகை கட்டணத்தை தராமல் தலைமறைவாகியுள்ளார்.

வெகுநேரம் காத்திருந்தும் பணத்துடன் திரும்பி வராததை அடுத்து ஆத்திரம் அடைந்த கேப் ஓட்டுனர் பொலிசாருக்கு தகவல் அளித்து நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்த பொலிசார் தூக்கம் நடித்து படுத்திருந்த நபரை அவரது படுக்கை அறையில் வைத்தே கைது செய்தது.

இதனையடுத்து பொலிசார் தலையிட்டு பயண கட்டணமான 1,643 பவுண்ட்ஸ் மொத்தமும் செலுத்த வைத்துள்ளனர்.

விமானத்தில் பயணித்திருந்தால் 70 நிமிடத்தில் சென்று சேர வேண்டிய தூரத்தை மது போதையில் தடுமாறிய குறித்த நபர் வாடகை டாக்ஸியில் 370 மைல்கள் பயணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.