பிரித்தானியா நாட்டை சேர்ந்த ஜே (21) எனும் இளைஞர் சுமார் 20 வருடங்களாக தனது பற்களை சுத்தம் செய்யாத காரணத்தால், வாய் முழுவதும் தொற்று ஏற்பட்டு பற்கள் அகற்றப்பிட்டுள்ளன.
துப்புரவு தொழிலாளியான ஜே, தனது சிறு வயது முதலே பல் துலக்காமல் இருந்துள்ளார். அதுமட்டுமின்றி சர்க்கரை உணவுகள், சோடா போன்ற பானங்களை அதிகமாக குடிக்கும் பழக்கம் இவருக்கு இருந்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
பற்களை சுத்தம் செய்ய வேண்டும் என்று யாரும் என்னை சிறுவயதில் இருந்து ஊக்கப்படுத்தவில்லை, இதனால் எனக்கு பல் துலக்கம் பழக்கம் ஏற்படவில்லை.
இதனால், நான் வளர்ந்தவுடன் இந்த மோசமான பழக்கத்தை கடைபிடித்து வந்தேன். இதுகுறித்து வெளியில் சொன்னால் யாரும் என்னை தவறாக நினைத்துவிடுவார்களோ என நினைத்து யாரிடமும் இதுகுறித்து பகிர்ந்துகொள்ளவில்லை
இந்நிலையில், பல் மருத்துவரிடம் பரிசோதனைக்கு சென்ற போது, ஜே வின் பற்கள் ஒரு சாக்கடையை விட மோசமான நிலையில் இருந்ததாக மருத்துவர் ஜேம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
வாயில் பல பற்கள் சொத்தையாகவும், பல தொற்றுகள் ஏற்பட்டு இருந்ததை கண்டுபிடித்தார்.
அதன் பின் மருத்துவர் ஜேம்ஸ், நுட்பமான கருவிகள் மூலம் ஜேவின் வாயில் ஏறத்தாழ 11 பற்களை அகற்றி, அதற்கு பதிலாக போலி பற்களை வைத்து, மீதுமுள்ள பற்களை பாலிஷ் செய்து, ஜேவின் வாயை புதிப்பித்துள்ளார்.