ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறும் என கணித்த பெண் தற்போது புத்தாண்டு தொடர்பில் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.
பிரித்தானியாவை சேர்ந்த Jemima Packington (61) என்ற பெண் வெளியிட்டுள்ள கணிப்பில் பிரித்தானிய பிரதமரின் பதவி இந்த ஆண்டின் இறுதிக்குள் பறிக்கப்படும் எனவும், அமெரிக்காவால் உலக நாடுகளில் அச்சுறுத்தலும் கலவரமும் ஏற்படும் எனவும் சில நாடுகள் போருக்கு ஆயத்தமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தெடர் நிலைநடுக்கங்களால் மனித குலம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் எனவும், எரிமலைச் சீற்றம் இந்த ஆண்டு அதிக அளவில் ஏற்பட வாய்ப்பு உண்டு எனவும் தெரிவித்துள்ளார்.
உலகின் முக்கிய நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் எனவும், ஆனால் அது மீண்டு எழுச்சி பெறும் எனவும் கணித்துள்ளார்.
அத்துடன் ஆஸ்கார் விருதினை இந்த முறை பிரித்தானிய நடிகர் ஒருவர் கைப்பற்றுவார் எனவும், பிரித்தானிய திரைப்படங்கள் முக்கிய விருதுகளை கைப்பற்றும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆண்டின் ஆரம்பத்திலேயே பிரித்தானியா புயல் மற்றும் பெருவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கும் எனவும் கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.