வல்வெட்டித்துறை பிரதேசத்தில் கல்லறைக்குள் சிக்கிய மர்மம்!

agency-industryயாழ்ப்பாணத்தில் கல்லறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா, அபின், ஹாஷிஸ் ஆகிய போதைப்பொருட்கள் அடங்கிய தொகை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை பிரதேசத்தில் நேற்று முன்தினம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினரால் இந்த போதைப்பொருள் தொகை மீட்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில் 87 கிலோ 800 கிராம் கஞ்சா, 03 கிலோ 600 கிராம் அபின், 3 கிலோ 900 கிராம் ஹாஷிஸ் கைப்பற்றப்பட்டுள்ளன.

வல்வெட்டித்துறை, பிரதேச கல்லறையில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இந்த போதைப்பொருள் இந்தியாவில் இருந்து படகு மூலம் கொண்டுவரப்பட்டு வேறு பிரதேசத்திற்கு கொண்டு செல்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.