இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பான அறிக்கை ஜனாதிபதியின் கைகளில் கிடைத்துள்ள நிலையில், இது தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள விசேட அறிக்கையானது, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது என்பது பற்றி இவ்வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது.
குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரை காப்பாற்றும் வகையில் அமைந்துள்ள ஜனாதிபதியின் விசேட அறிக்கை மற்றும் மஹிந்த கம்பனியை இதில் சிக்கவைக்க எடுக்கப்படும் திட்டம் தொடர்பிலும் லங்காசிறியின் அரசியற் களம் வட்டமேசையில் எம்.எம்.நிலாம்டீன் அவர்கள் இணைந்து கொண்டு பல தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.