தமிழ் பொண்ணு என்று சொல்லும் சாய் பல்லவி முதலில் மலையாள சினிமாவில் தான் கால் வைத்தார். பிரேமம் என்ற ஒரே படம் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழியிலும் இவருக்கு ரசிகர்கள் குவிந்தனர். இவர் மேலும், தெலுங்கில் ப்பிதா என்றொரு படம் நடித்தார். அதுவும் வெற்றிப் படமே ஆகும்.
மேலும் இவர், ஏ.எல்.விஜய் இயக்கும் கரு படத்தில், நான்கு வயது சிறுமிக்கு அம்மாவாக நடிக்கிறார். இந்த படம் அடுத்த மாதம் ரிலீஸாக உள்ளது. இந்த மாதிரியான சவாலான காதாபாத்திரத்தில் நடித்து வரும் சாய் பல்லவி, தற்போது சூர்யாவுடன் இணைந்து செல்வ ராகவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் அதிகாரப்பூர்வமான வெளியானது.
இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங்கும் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமான செய்திகள் வெளியாகின. இந்த படத்தின் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு தான் அதிக முக்கியத்துவம் உண்டாம். சாய் பல்லவி பிளாஷ் பாக்கில் மட்டும் தான் வருவாராம். முக்கியத்துவம் குறைவாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க யோசிக்கிறாராம் சாய் பல்லவி.