நோவ ஸ்கோசியாவில் 11 வாரங்கள் முன்னராகவே 2016ல் கிறிஸ்மஸ் தினம் மற்றும் புதுவருட தினத்திற்கிடையில் பிறந்த முப்பிறவிகளான இமானி, ஆரியா மற்றும் நைலா-ட்ரிப்பிள் லீஸ் எனப்படும் மூன்று பெண் குழந்தைகள். இவர்களிற்கு இரண்டு வயது ஈதன் மற்றும் ஐந்து வயது ஏயடன் என இரு சகோதரர்கள்.பெற்றவர்களிற்கு கடந்த வருடம் மிகவும் பிசியாக இருந்த போதிலும் ஒரு மகிழ்ச்சியான குழப்பம் என தெரிவித்தனர்.முதல் பிறந்த குழந்தையான இமானி தற்போது நடக்க ஆரம்பித்துள்ளாள் என்பது இனிப்பான செய்தி.