நவீன காரில் கணவன் மற்றும் மனைவியின் மோசமான செயற்பாடு!!

12-3-2015-6-52-38-AM-7905938மட்டக்களப்பு – வாழைச்சேனையில் இருந்து நவீன கார் ஒன்றில் கஞ்சா போதைப்பொருளை பொலன்னறுவைக்கு எடுத்துச் சென்ற கணவன் மற்றும் மனைவியை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

இவர்கள் மன்னப்பிட்டி பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலன்னறுவை பொலிஸ் மோசடி தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து பொலிஸ் குழுவொன்று வாகனத்தை தடுத்து நிறுத்தி தேடுதல் நடத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட கணவன் மற்றும் மனைவி ஆகியோர் வாழைச்சேனை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

பெண்ணுக்கு 30 வயது எனவும் ஆணுக்கு 39 வயது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் காரில் தேடுதல் நடத்தி கஞ்சாவை கைப்பற்றிய போது சந்தேகநபர்களின் குழந்தை காரின் பின் ஆசனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதி மீது தூங்க வைக்கப்பட்டிருந்தாக விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.