இந்தியாவில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மனைவியை அலுவலகத்தில் வைத்து சரமாரியாக கத்தியால் குத்திய கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பேராவுரணியைச் சேர்ந்த உதயகுமார், இவரது மனைவி சரண்யா. இந்நிலையில் சரண்யா ஒரு தனியார் அலுவலகத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
தனது மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக இவ்வாறான கொடூர சம்பவத்தினை கணவன் செய்துள்ளது தெரியவந்துள்ளது.
படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அப்பெண்ணிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.