பிரபல நடிகர் ராஜினாமா, நடிகர் சங்க பதவியில் இருந்து!!

நடிகர் சங்கத்தில் நாசர் மற்றும் விஷால் தலைமையிலான அணி தேர்தலில் வெற்றி பெற்று பதவிக்கு வந்த பிறகு பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

pandavar-ani-teamஆனாலும் நடிகர் சங்க கட்டிடம் கட்டுவது, நட்சத்திர கிரிக்கெட், நட்சத்திர விழா நடத்துவது என அவர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் மலேசியாவில் நடந்த நட்சத்திர கலை விழாவில் சில கலைஞர்கள் அவமதிக்கப்பட்டதாகக் கூறி நடிகர் சங்கத்தில் தான் வகித்து வந்த டிரஸ்டீ பதவியை நடிகர் எஸ்.வி.சேகர் ராஜினாமா செய்துள்ளார்.

நடிகர்களை விமான நிலையம் வரவைத்து யாரையும் அவமானப்படுத்தி திருப்பி அனுப்பியதில்லை என நேற்று அவர் நடிகர் சங்க முன்னாள் தலைவர் விஜயகாந்த்தை புகழ்த்திருந்தார். அதனால் தற்போது அதுபோல ஏதோ ஒரு நடிகருக்கு நடந்துள்ளது என கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது