டிரம்ப் அதிரடி! குடியுரிமையை இழக்கும் மக்கள்…

அமெரிக்காவில் வசிக்கும் 2 லட்சம் எல் சல்வடோர் நாட்டவர்களை அந்த நாட்டைவிட்டு வெளியேற்ற டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எல் சல்வடோர் மக்களின் குடியுரிமை மற்றும் பணிபுரிதல் உரிமைகளையும் ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

2001 ஆம் ஆண்டு மத்திய அமெரிக்காவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து, மனிதாபிமான அடிப்படையில் அந்த பகுதியினருக்கு தற்காலிமாக அடைக்கல அந்தஸ்து அளிக்கப்பட்டு அவர்கள் அமெரிக்காவில் வசிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

தற்போது டிரம்ப் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவைவிட்டு சல்வடோரியர்கள் வெளியேற வேண்டும். இல்லையென்றால் அவர்கள் நாடுகடத்தப்படுவார்கள் எனவும் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை சல்வடோரியர்கள் அமெரிக்காவில் வசிக்க அனுமதி அளிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளது.

 

 

அதன் பின் அவர்கள் அமெரிக்காவைவிட்டு வெளியேற வேண்டும் அல்லது அமெரிக்காவில் தொடர்ந்து வசிக்க வேண்டுமென்றால் சட்ட உதவிகளை நாட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் 2001 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் விளைந்த நிலைமைகள் அந்த நாட்டில் தற்போது தொடரவில்லை எனவும் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டிரம்ப் நிர்வாகத்தின் இந்த அதிரடி உத்தரவால் சுமார் 2 லட்சம் எல் சல்வ்டோர் மக்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

டிரம்ப் நிர்வாகம் முன்னதாக ஆயிரக்கணக்கான ஹைத்தியர்கள் மற்றும் நிராகுவே மக்களின் தற்காலிக அடைக்கல அந்தஸ்தை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.