சட்டசபை வளாகத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்!

அமைச்சர் செல்லூர் ராஜூவை ஓட..விட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் : சட்டசபை வளாகத்தில் கதறி அழுத்த சோகம்!

large_sellur-raju-5343சட்டப்பேரவைக்கு கடைசி ஆளாக வந்த செல்லூர் ராஜுவை வம்புக்கு இழுத்து எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க-வினரை மேலும் எரிச்சலூட்டியிருக்கின்றனர் தினகரன் ஆதரவாளர்கள். .

2018-ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை சரியாக 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. முன்னதாக ஆளுநர் பன்வரிலால் சட்டப்பேரவைக்கு வந்ததை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் வந்தனர். அதேபோல் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினுடன் தி.மு.க எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு வந்தனர்.

மேலும், சட்டசபைக்கு முதல்முறையாக வந்த ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ தினகரனுக்கு தி.மு.க எம்.எல்.ஏக்கள் நேரு, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். தினகரனுடன் வந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் 18 பேரை சட்டப்பேரவைக்குள் நுழைய அனுமதிக்கவில்லை.

தினகரனுடன் இன்று சட்டசபைக்கு வந்த தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் 18 பேரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ-க்களும் சட்டப்பேரவை நுழைவு வாயிலிலேயே நின்று கொண்டனர்.

அப்போது கடைசி ஆளாகச் சட்டப்பேரவைக்கு வந்த அமைச்சர் செல்லூர் ராஜூவை வெளியே நின்றுகொண்டிருந்த தினகரன் ஆதரவு முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் தொண்டர்கள் “ஹலோ மிஸ்டர் தெர்மாகோல்” என்று அழைத்துக் கிண்டல் செய்துள்ளனர்.

இவர்கள் கத்திக்கொண்டிருந்ததைப் பெரிதாகப் பொருட்படுத்தாத செல்லூர் ராஜு சட்டைக் கையை மடித்தபடி சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். இதனால், அங்கு சலசலப்பு ஏதும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.