செய்திப் பணிப்பாளர் மீது தாக்குதல்!!

5a53844117d3e-IBCTAMILயாழ்ப்பாணத்திலிருந்து ஒளிபரப்பாகும் டான் தனியார் தொலைக்காட்சியின் கலையகத்துக்குள் புகுந்த வயோதிப நபர் ஒருவர் இன்று திங்கட்கிழமை மாலை அந்த நிறுவனத்தின் செய்திப் பணிப்பாளரைத் தாக்கியதுடன் கத்தியால் குத்திக் கொலை செய்ய முற்பட்டுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்டவர் டான் நிறுவனப் பணியாளர்களால் பிடிக்கப்பட்டு யாழ் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியின் செய்திப் பணிப்பாளர் மீது யாழில் தாக்குதல்

சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளாகிய டான் செய்திப் பிரிவின் பணிப்பாளர் தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மருத்துவ சோதனைகளின் பின் அவர் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளார்.

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியிலுள்ள டான் தொலைக்காட்சி நிறுவனத்துக்குள் இன்று மாலை கத்தியுடன் அத்துமீறி நுழைந்த மர்ம நபர் அங்கிருந்த செய்திப் பிரிவுப் பணிப்பாளரை கதிரையால் தாக்கினார்.

அதன்பின்னர் தான் கொண்டுவந்த கத்தியால் குத்த அந்த நபர் முற்பட்டார். எனினும் டான் ஊழியர்கள் அவரை காப்பாற்றினர்.

இதனால் தடுமாறிய அந்த மர்ம நபர் நிறுவனத்திலிருந்து தப்பி ஓடிய போது நிறுவன ஊழியர்கள் அந்த நபரைத் துரத்திப் பிடித்து யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் டான் நிறுவனத்தினரால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.