இன்று யாழ்ப்பாணத்தில் சிதம்பரம் செல்லும் பக்தர்களுக்கான பதிவுகள்!

சிதம்பரம்_நடராஜர்_கோவில்_நந்தி_சிலைதமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க சிதம்பரம் ஆலயத்தை தரிசிக்க, ஈழத்தின் வடக்கு மாகாண இந்துக்கள் செல்வதற்கான கப்பல் ஒழுங்குகள், இந்து கலாசார திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் செல்ல விரும்புவோர் யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில், தமது பதிவுகளை இன்று தொடக்கம் மேற்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் செல்லும் பக்தர்களுக்கான பதிவுகள் இன்று யாழ்ப்பாணத்தில் !

பதிவுகள் மற்றும் பயண ஒழுங்குகளை முன்னெடுக்க, இந்து கலாசார திணைக்களத்தின் அதிகாரிகள் குழு கொழும்பிலிருந்து இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளனர்

வடக்கு மாகாண இந்துக்கள், சிதம்பரம் நடராஜாப் பெருமானை தரிசிக்க, காங்கேசன்துறையிலிருந்து கப்பல் மூலம் செல்வதற்கு, இந்திய, இலங்கை அரசுகள் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2ஆம் திகதி இடம்பெற்ற திருவாதிரை உற்சவத்தை, வடக்கு மாகாண இந்துக்கள் தரிசிக்க ஏதுவாக ஒழுங்குகள் இடம்பெற்றன. எனினும் கப்பல் இல்லாத காரணத்தால் அவை கைவிடப்பட்டன.

இந்த நிலையில், விரைவில் கப்பல் ஒழுங்குகளை முன்னெடுத்து, வடக்கு மாகாண இந்துக்களை சிதம்பரத்துக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை, இந்துக் கலாசார திணைக்களம் பொறுப்பெடுத்துள்ளது. அதற்கான பணிகள் இன்று ஆரம்பமாகின்றன. இதேவேளை, சிதம்பரம் செல்ல பதிவுகளை மேற்கொள்வோருக்கு, ஒரே நாளில் விசா வழங்கப்படும் என்று, யாழ். இந்திய துணைத் தூதுவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.