கனடா-ஒசாவா வீடொன்றில் ஏற்பட்ட அழிவுகரமான தீயினால் இரு சிறுவர்கள் மற்றும் வயதான ஆண் பெண் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் திங்கள்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
காலை 8மணிக்கு சிறிது பின்னர் ஒசாவா கொல்போன் வீதிக்கருகில் உள்ள வீடொன்றில் விபத்து நடந்துள்ளது.
வீட்டின் மேற்பகுதியில் மக்கள் சிக்கி கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு சேவை குழுவினர் மிக சிரமத்திற்கிடையில் வீட்டின் மேல் மாடிக்கு சென்றுள்ளனர். வெளியில் நின்றவாறு தீயை தட்டி பின்னர் மேல் பகுதிக்கு சென்றுள்ளனர்.
கடுமையான தீ நிலைமைக்கு மத்தியில் வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.
ஒரு மனிதன், பெண் ஒருவர், சிறு பையன், பெண் சிறுமி நால்வரும் வெளியே எடுக்கப்பட்டபோதிலும் பின்னர் இவர்கள் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களின் வயதுகள் பெயர்கள் வெளியிடப்படவில்லை.
பல அலகு வீட்டில் 11பேர்கள் வரை வசித்ததாகவும் மற்றய குடியிருப்பாளர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இன்று காலை ஏற்பட்ட பனிபுயலிற்கு மத்தியில் தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு குழுவினர் தீயுடன் போராட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்கள்.
இது ஒரு சோக நிகழ்வாகும்.