கனடா ஸ்கார்பாரொவில் பாதையை கடக்க முற்பட்ட பாதசாரி பெண் மீது பேருந்து ஒன்று மோதியதில் குறித்த பெண் உயிருக்க ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து முதலுதவி வழங்கிய பணியாளர் குறிப்பிடுகையில்…
ஞாயிற்றுக்கிழமை இரவு மார்க்கம் வீதியில் ஸ்டீல்ஸ் அவென்யூகிழக்கு பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பேருந்து மோதி படுகாயமடைந்துள்ளதாக தங்களுக்கு அழைப்பு வந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் விபத்தில் காயமடைந்த பெண்ணின் அடையாள விபரங்கள் இதுவரை தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை விபத்தை ஏற்படுத்திய சாரதி குறித்து தகவல்கள் எதுவும் இது வரை கிடைக்கவில்லை என்றும் மேலதிக விசாரணைக்காக ஸ்டீல்ஸ் அவென்யூ கிழக்கு பாதை மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.