டெங்கு சோதனை நட­வ­டிக்­கை­கள் தீவி­ரம்!!!

வவு­னியா – நெளுக்­கு­ளம், ஈசன்­கோட்­டம் பகு­தி­க­ளில் ஒரு மாதத்துக்குள் டெங்கு நோயால் பீடிக்­கப்­பட்ட 19 பேர் இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­தையடுத்து  அந்த­ப்பி­ர­தே­சத்­தில் டெங்கு ஒழிப்பு நட­வ­டிக்­கை­கள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

dengue-feverஇதன்­போது டெங்கு நுளம்­பு­கள் பர­வு­வ­தற்கு ஏது­வான நிலை­யில் சூழலை வைத்­தி­ருந்த 14 வீட்டு உரி­மை­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. நீதி­மன்­றத்­தி­னால் 33,000 ரூபா தண்­டம் விதிக்­கப்­பட்­டது.

இந்த ப­கு­தி­க­ளில் சுமார் 525 வீடு­கள் பார்­வை­யி­டப்­பட்டு பரி­சோ­த­னை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன – என்று வவு­னியா சுகா­தார வைத்­திய அதி­காரி பணி­மனை மேற்­பார்­வைப் பரி­சோ­த­கர் க.தியா­க­லிங்­கம் தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

“நெளுக்­கு­ளம், ஈசன்­கோட்­டம் பகு­தி­க­ளில் 19 டெங்கு நோயா­ளர்­கள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­னர். இத­னைத் தொடர்ந்து அந்தப் ப­கு­தி­யில் தடுப்பு நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. நுளம்­புக் குடம்­பி­கள் காணப்­பட்ட வீட்டு உரி­மை­யா­ளர்­கள் 14 பேருக்கு எதி­ராக நீதி­மன்­றத்­தில் வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டது.  நெளுக்­கு­ளம் மற்­றும் ஈசன்­கோட்­டம் பகு­தி­கள் தொடர்ந்­தும் கண்­கா­ணிப்­புக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

வீடு­கள் பார்­வை­யி­டப்­பட்டு நுளம்பு பெருக்­கெ­டுக்­கும் இடங்­கள் அழிக்­கப்­பட்­டுள்­ளன. வீட்டு உரி­மை­யா­ளர்­கள் தமது பகு­தி­க­ளைச் சுத்­தப்­ப­டுத்தி டெங்கு நுளம்பு பெருக்­கத்­தைக் கட்­டுப்­ப­டுத்த வேண்­டும்.எமது சுகா­தா­ரப் பரி­சோ­த­கர்­கள் பார்­வை­யி­டும்­ போது டெங்கு நுளம்பு பெருக்­கெ­டுக்­கும் இடங்­கள் இனங்­கா­னப்­பட்­டால் சட்ட நவ­டிக்கை எடுக்­கப்­ப­டும்.”  என்­றார்.