அம்பாறை மாவட்டத்தின், திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கோரைக்களப்பு முகத்துவாரம் பகுதியில், கடலோரமாக கரையொதிங்கிய நிலையில் ஆணின் சடலம் ஒன்று இன்று(09.01.2018) காலை மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
திருக்கோவில் பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்ட போது கரையொதுங்கிய நிலையில், ஆணின் சடலத்தினை பொலிசார் மீட்டுள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளவர், தம்பிலுவில் வில்லியம்பிள்ளை வீதியைச் சேர்ந்த, 49 வயதுடைய, ஒரு பிள்ளையின் தந்தையான, வைரமுத்து கருணாநிதி என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேற்படி சடலமாக மீட்கப்பட்டவர் நேற்று திங்கட்கிழமை(08.01.2018) தனது வீட்டில் இருந்து மேசன் தொழிலுக்காக புறப்பட்டுச் சென்றிருந்ததாகவும், இரவு வரை வீடு திரும்பாத நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை காலை சடலமாக கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இவரின் கால்களில் மீன் பிடிப்பதற்காக பயப்படுத்தப்படும் தங்கூசி நூல்கள் காணப்படுவதுடன், இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.