மானத்தமிழர் நிலத்தில் மராட்டியனுக்கு என்ன வேலை??

seeman-slams-bjp-modi-pongal-holiday-jallikaatuநடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தான் அரசியலில் பிரவேசிக்கப் போவதாகவும், புதிதாக ஓர் அரசியல் கட்சியினை துவக்கி வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் தமிழகத்திலுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக கடந்த ஆண்டு நடைபெற்ற தனது ரசிகர்கள் சந்திப்பு நிகழ்வின் போது அறிவித்தார். ரஜினியின் அறிவிப்பினை தொடர்ந்து அவரது அரசியல் வருகையை ஆதரித்தும், எதிர்த்தும் அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்தினை பதிவு செய்து வருகின்றனர்.

மானத்தமிழர் நிலத்தில் மராட்டியனுக்கு என்ன வேலை ; சீமான் ஆவேசம்.!

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தை ஒருபோதும் தமிழக அரசியல் தளத்தில் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அவருக்கு எதிரான மூர்க்கமான அரசியல் செயல்பாடுகளை நாங்கள் முன்னெடுப்போமென அறிவித்துள்ளார்  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்று இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட சீமான், “மானத்தமிழர் நிலத்தில் மராட்டியனான ரஜினிக்கு என்ன வேலை, பிழைப்புக்காக வந்தவர்களிடத்தில் எங்களை ஆளும் தகுதியினை ஒப்படைப்பது என்பது எம் இனத்திற்கு செய்கிற இழிவு. ஆகவே, ரஜினியை ஒருபோதும் தமிழக அரசியல் தளத்தில் நாங்கள் வெல்ல அனுமதிக்கப்போவதில்லை” என ஆவேசமாக பேசினார்.