கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற புகையிரதத்தில் இருந்து தவறி விழுந்த வயோதிபர்!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரத்தில் இருந்து தவறி விழுந்து, 70 வயதுடைய வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

யாழ் நோக்கிச் சென்ற புகையிரதத்தில் இருந்து தவறி விழுந்த வயோதிபர்!

யாழ்ப்பாணம், சங்கத்தானை புகையிரத நிலையத்தில் இன்று(09.01.2018) காலை 5:30 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த புகையிரத்தில் பயணித்த அவர் கீழே இறங்க முற்பட்டபோதே தவறுதலாக விழுந்து புகையிரதத்தில் மோதுண்டதாகத் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் கொறனை பகுதியைச் சேர்ந்த, 70 வயதுடைய அமரசிங்க ஆறாதிலக ஜெயவர்தன என்பவரே காயமடைந்த நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.