15 வயது தொடக்கம் தேசிய அடையாள அட்டை!! – ஆட்பதிவுத் திணைக்களம்

625.500.560.350.160.300.053.800.900.160.90 (1)நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும், தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கான சுற்றறிக்கை, அடுத்தவாரம் வெளியிடப்பட இருப்பதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க தெரிவித்துள்ளார்.கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் மற்றும் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை முன்கூட்டியே வழங்கும் நோக்கில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்கமைவாக, பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள விரைவாக விண்ணப்பிக்குமாறு, பாடசாலை அதிபர்களிடம் ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.இலங்கைப் பிரஜையாயின், 16 வயது பூர்த்தியடைந்த நிலையில், தேசிய அடையாள அட்டையினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நடைமுறை நாட்டில் உள்ளது. இந்த நிலையில், இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு, தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கான வயதெல்லை 16 இல் இருந்து 15 வரை குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.