மண்வெட்டிகொண்டு வேட்பாளர் ஒருவரை துரத்திய சிறிதரனின் அடியாட்கள்!! (காணொளி)

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு  (சுரேஸ், ஆனந்தசங்கரி அணி) கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதி வேட்பாளர் ஒருவர்மீது தமிழரசுக்கட்சி இளைஞரணி  மண்வெட்டிகொண்டு துரத்தியதாகவும் உடனடியாக தேர்தலில் இருந்து விலகுமாறு மிரட்டியதாக தர்மபுரம் பொலீசில் முறையிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

தாக்க வந்தவர்கள் இங்கே தமிழரச கட்சி சார்பில் ஒருவர் போட்டியிடுகிறார் எனவே அவரை மீறி இங்கு யாரும் போட்டியிடமுடியாது உடனடியாக விலகுமாறு மிரட்டியதாக வேட்பாளர் தெரிவித்துள்ளதோடு,
தாக்குதலாளிகளை பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனே அனுப்பியதாகவும் தாக்குதல் நடாத்த வந்தவர்கள் தங்களை மிரட்டியவாறு தொலைபேசியெடுத்து   சேர் நீங்கள் சொன்னமாதிரி வேலை நடந்துகொண்டிருக்கு   ஒபிஸ் திறப்பதற்கு விடவில்லை என பேசியதாகவும் சம்பந்தப்பட்ட நபர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.