முகப் புத்தகம் ஊடாக பிரபாகரனின் புகைப்படத்துடன் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்தவருக்கு நடந்த கதி!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படம், புலிகளின் இலட்சினை அடங்கிய 2018 புது வருட வாழ்த்துக்களை முகப் புத்தகம் ஊடாக தயார் செய்து அதனை பகிர்ந்ததாக கூறப்படும் இருவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

2007 ஆம் ஆண்டின் 66 ஆம் இலக்க சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் விதிவிதானங்களுக்கு அமைவாக இவ்விருவரும் கைது செய்யப்பட்டு இன்று கொழும்பு மேலதிக நீதிவான் தனுஜா ஜயதுங்க முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

செவன் தினேஷ் குமார், விஜேகுமார் விதூஷன் ஆகிய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Capturexdvfxdg