கனடா, ஒசாவா பகுதியில் திடீரென வீடொன்றில் தீ பற்றி எரிந்த சம்பவத்தில் இரு குழந்தைகள் உட்பட நால்வர் பலியாகியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, ஒசாவா பகுதியிலுள்ள பல அலகு வீட்டினுள் இன்று திங்கள் கிழமை காலை உள்ளூர் நேரப்படி சுமார் 8.30 மணியளவில் தீ பரவி ஒரு சில நிமிடத்திற்குள் சாம்பலாகியது.
இதில், இரு குழந்தைகள் மற்றும் ஒரு பெண் மற்றும் இவர்களை காப்பாற்ற பின்வழியால் சென்ற அயலவர் என நால்வர் பலியாகியுள்ளனர். இதில் காயமடைந்த மூவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இது குறித்து தீயணைப்பு படையினர், மிகப் பெரிய புகைமூட்டம் காணப்பட்டதாகவும் அதனை தொடர்ந்து மிச சிரமத்துடன் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்
மேற்படி வீடு பல அலகுகளாக பிரிக்கப்பட்டு சுமார் 11பேர் வரை இருந்தமையால் பலியானவர்கள் ஓரே குடும்பத்தை சேர்ந்தவர்களா என கண்டறியப்படவில்லை.
இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.