பெண்ணின் தற்கொலை காட்சிகளை பேஸ்புக்கில் நேரலை செய்த நபர்!!

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொள்ளும் காட்சிகளை டாக்ஸி ஓட்டுனர் ஒருவர் பேஸ்புக்கில் நேரலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவரும் அதிகாரிகள் தொடர்புடைய டாக்ஸி ஓட்டுனரை விசாரணை செய்துள்ளனர்.

பாங்காக்கில் உள்ள Chao Phraya ஆற்றில் கடந்த 2-ஆம் திகதி 18 வயதேயான Nittaya Sawasdiwan என்ற இளம்பெண் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவரை குறித்த பகுதிக்கு இட்டுச் சென்ற டாக்ஸி ஓட்டுனர், அவர் தற்கொலை செய்து கொள்ளும் காட்சிகளை பேஸ்புக் பக்கத்தில் நேரலை செய்வதற்கு கட்டணமாக 500 பாஹ்த் தொகையை அவர் வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் நடந்தவற்றைக் கண்டு அதிர்ச்சியுற்ற டாக்ஸி ஓட்டுனர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

தகவலறிந்த பொலிசார் சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்து தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்ணின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் அன்று உடலை மீட்க முடியாமல் பொலிசார் திரும்பும் நிலை ஏற்பட்டது. இதனிடையே சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்கு பின்னர் சுமார் 500 மீற்றர்கள் தொலைவில் குறித்த பெண்ணின் உடலை பொலிசார் மீட்டனர்.

குறித்த பெண் தற்கொலை செய்து கொண்ட காரணம் தெரியாத நிலையில், அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கண்முன்னே நபர் ஒருவர் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் அவரை காப்பாற்ற முயற்சிக்காமல் இருந்தமைக்காக டாக்ஸி ஓட்டுனர் தண்டிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்தின் சட்டத்தின்படி குறித்த நபருக்கு ஒருமாத சிறை அல்லது 10,000 பாஹ்த் அபராதமாக விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.