அமெரிக்க நாட்டின், நியூயோர்க் மென்ஹெட்டன் நகரிலுள்ள, டிரம்ப் டவரில்(Trump Tower) ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 3 பேர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்க நேரப்படி நேற்றுக்(08.01.2018) காலை 7.00 மணியளவில், குறித்த கட்டடத்தின் மேல்மாடி பகுதியில், தீ பரவியுள்ளது. இதனையடுத்து, தகவல் கிடைத்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், தீயை முழுமையாக அணைத்து கட்டுப்படுத்தியுள்ளனர். மேற்படி தீ விபத்தில், தீயணைப்பு படை வீரர் உட்பட, 3 பேர் காயமடைந்ததாக, நியூயோர்க் தீயணைப்புத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, விபத்துக்கான காரணம் மற்றும் சேத விபரம் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்குச் சொந்தமான, டிரம்ப் டவர் அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. இந்தக் கட்டிடத்தில் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்கள், மற்றும் பிற முன்னணி நிறுவனங்களுக்கு சொந்தமான அலுவலகங்கள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.