தமிழ்நாட்டில் தற்போது ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த வருடம் செப்டம்பரில் வழங்கப்பட்ட ஒரு கார்டில் நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் இருந்தது. அது பலருக்கும் அதிர்ச்சியை தந்தது.
இந்நிலையில் இந்த தவறு நடக்க யார் காரணம் என அரசு விளக்கம்அளித்துள்ளது. அந்த குடும்ப உறுப்பினர் மொபைல் ஆப்பில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது தவறாக காஜல் புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளனர். அதனால் தான் ரேஷன் கார்டில் இந்த தவறு நிகழ்ந்துள்ளது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்துள்ளார்.