தேயிலைத் தோட்டத்தில் குளவித் தாக்குதலுக்கு இலக்கான பெண்கள்!

நுவரெலியா மாவட்டத்தின், மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டு மஸ்கெலியா தோட்டத்தில், குளவிகளின் தாக்குதலுக்கு இலக்காகி, நான்கு பெண்கள் உட்பட ஒரு வாய் பேசமுடியாத நபர் அடங்கலாக, ஐந்து பேர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மஸ்கெலியா வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் நேற்று (08.01.2018) மாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.

தேயிலைத் தோட்டத்தில் குளவித் தாக்குதல்!

தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த போது, குளவிக்கூட்டின் குளவிகள் திடீரென கலைந்து, தாக்கியுள்ளன. பறவை ஒன்று தேன் குடிப்பதற்காக, மரத்தில் கட்டியிருந்த குளவி கூட்டினை தாக்கியதால் கலைந்த குளவிகள், தொழிலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு பெண்ணும், வாய் பேசமுடியாத நபரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் காட்டு மஸ்கெலியா பகுதியை சேர்ந்த்வர்கள் என தெரிவிக்கப்படுகிறது.