சந்தோஷத்தில் குதிக்கும் ஆர்த்தி..! இதை விட வேறு என்ன வேண்டும்..?

மலேசியாவில் தமிழ் திரையுலகத்தினரின் நட்சத்திர கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், ரஜினி, கமல் உள்ளிட்ட பெரும்பாலானோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியனது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்டுவதற்காக நிதி திரட்டும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில், நகைச்சுவை நடிகை ஆர்த்தியும் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் எடுத்த போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் ஒன்றாக அமர்ந்திருந்த போது அவர்களுடன் எடுக்கப்பட்ட செல்ஃபியை பதிவிட்டு, இதைவிட வேறு என்ன வேண்டும் என்று தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

அதே போன்று விமானத்தில் செல்லும் போது ரஜினியுடன் எடுத்த செல்ஃபியையும் பதிவிட்டு ரஜினியை குரு என்றும் கூறியுள்ளார்.