கோர விபத்து!! சாரதி தொடர்பில் திடுக்கிடும் தகவல்?

கிளிநொச்சி – முழங்காவில் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்திற்கு காரணமான சாரதிக்கும், பொலிஸாருக்கும் இடையில் நெருக்கமான தொடர்பு இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

முழங்காவில் பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற குறித்த விபத்தில் சம்பவ இடத்திலேயே யாழ். இளைஞர்கள் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் தற்போது பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே மக்கள் குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

இந்த விபத்திற்கு காரணமான சாரதி அண்மையில் முழங்காவில் பிரதேசத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர். இருப்பினும் இது தொடர்பில் பொலிஸார் அந்த நபரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவில்லை.

அத்துடன் கடந்த 2 தினங்களுக்கு முன் சிறுவனொருவருக்கு வலுக்கட்டயமாக மதுபானம் வழங்கியதாக பொலிஸாரிடம் முறையிட்ட போதும், அது தொடர்பில் பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

குறித்த நபருக்கும் பொலிஸாருக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கின்றது. இதனாலேயே இவருக்கு எதிராக செய்யப்படுகின்ற எந்த முறைப்பாட்டுக்கும் பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

625.500.560.350.160.300.053.800.900.160.90 (1)