அநுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவரை பாலியல் வன்புணர்வவிற்கு உட்படுத்திய நபர் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுர மேலதிக மாவட்ட நீதவான், ஹர்ஷன கெக்குனுவெல உத்தரவிட்டுள்ளார்.
அநுராதபுரத்திலிருந்து பிரிதாரு இடத்திற்கு சென்று மீண்டும் விகாரைக்கு திரும்பிக்கொண்டிருந்தார் 17 வயதுடைய பௌத்த பிக்கு.
இதன்போது பேருந்து தரிப்பு நிலையத்தில் வைத்து 52 வயதுடைய இலக்கம் 364 கும்பிச்சிக்குளம் பகுதியை சேர்ந்த விமலரத்ன என்பவர் பௌத்த பிக்குவை ஓரின பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் முறைப்பாடு செய்த குறித்த பிக்கு காவல் துறையினர் வாயிலாக வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள விமலரத்ன இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.