விவாகரத்துக்கு பின்னர் டிடியின் அதிரடி முடிவு..!!

21-1405919160-vijay-tv-anchor-dd--600சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் டிடி என்னும் திவ்யதர்ஷினி.

இவர் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். அதிலும் இவரின் அன்புடன் டிடி நிகழ்ச்சி தனி ஸ்பெஷல். இதற்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

மேலும் இவர் தற்போது கணவருடன் கருத்துவேறுபாடு விவாகரத்து போன்ற பிரச்னைகளில் சிக்கி தவித்து வருகிறார். இதனால் முன்பு போல நிகழ்ச்சிகளிலும் காணமுடியவில்லை.

இந்த நிலையில், டிடி தற்போது ஏதாவது சிறப்பு நிகழ்ச்சி என்றால் மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில் இந்த வாரம் தானா சேர்ந்த கூட்டம் ஸ்பெஷலாக நடிகர் சூர்யாவை டிடி பேட்டி எடுக்க உள்ளார்.