சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் தொடர்பாக முடிவு செய்வதற்காக, உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்களைக் கொண்ட அமர்வு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
தனது பதவிக்காலம் 2020ஆம் ஆண்டு நிறைவடைகிறதா அல்லது 2021ஆம் ஆண்டு நிறைவடைகிறதா என்று விளக்கமளிக்குமாறு சிறிலங்கா உச்சநீதிமன்றத்திடம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்திருந்தார்.
எதிர்வரும் 14ஆம் நாளுக்கு முன்னதாக, தமக்கு இதற்கான பதிலைத் தருமாறும் அவர் கோரியிருந்தார்.
இந்த நிலையில், நாளை உச்சநீதிமன்றத்தின் திறந்த அமர்வு ஒன்றில் இதுகுறித்து விவாதிக்கப்படவுள்ளது.
ஐந்து நீதியரசர்களைக் கொண்ட அமர்வு இதுபற்றிய விசாரணைகளை நடத்தி, முடிவை அறிவிக்கும் என்று சிறிலங்காவின் தலைமை நீதியரசர் பிரியசாத் டெப் அறிவித்துள்ளார்.