நடைமுறையிலுள்ள வீசா கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டமூலத்தின் பிரிவு மற்றும் சட்டத்திட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் கயந்த கருணாதிலக்க இந்தத் தகவலை வெளியிட்டார்.
அதற்கமைய தற்போது ரூபாவினால் அறவிடப்படுகின்ற வீசா கட்டணம் அமெரிக்க டொலர்களில் அறவிடுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் இரட்டை குடியுரிமைக்காக விண்ணப்பிக்க முடியாமல், வெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ள இலங்கையர்களுக்கு நிரந்தர வதிவிட விசா வழங்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டினை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்திற்கமைய புதிய முறை அறிமுகப்படுத்தி வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.