இன்றைய ராசிபலன் (11.01.2018)

  • மேஷம்

    மேஷம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர் கள் மதிப்பார்கள். நன்மை கிட்டும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: குடும்பத்தாரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின்  திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தொட்டது துலங்கும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும்.  உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.

  • கடகம்

    கடகம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்துவேறுபாடுகள் வந்து நீங்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில்  அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தைரியம் கூடும் நாள்.

  • கன்னி

    கன்னி:  கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். முகப்பொலிவுக் கூடும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத் தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

  • துலாம்

    துலாம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். சில விஷயங் களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில்  மற்றவர்களை விமர்சித்து பேச வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். நெருங்கி யவர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசு வார்கள். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் பாக்கிகள்  வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

  • தனுசு

    தனுசு: சவாலான விஷயங் களை சாமர்த்தியமாக  பேசி முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். பிரியமானவர் களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் சூழ்ச்சி களை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

  • மகரம்

    மகரம்:  சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாக பேசத் தொடங்குவார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை  மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவா கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.   வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மாறுபட்ட அணுகுமுறையால் முன்னேறும்  நாள்.

  • மீனம்

    மீனம்:  சந்திராஷ்டமம் தொடர்வதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்கா மல் நீங்களே செய்து முடிப்பது நல்லது.  உங்கள் வாயை சிலர் கிளறி வேடிக்கைப் பார்ப்பார்கள். அதிகம் பேச வேண்டாம். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் வளைந்துக்கொடுத்து  போவது நல்லது. போராட்டமான நாள்.