இந்த உலகத்தில் ஈடு, இணை இல்லாத உறவு என்றால் அது தாய் மட்டுமே. ஏனென்றால், தாயின் பாசத்திற்கு நிகராக வேறேதும் இல்லை. தாய்க்கு பிறகுதான் நாம் கையெடுத்து வணக்கும் கடவுளும் கூட.
இந்நிலையில், எங்களை ஈன்றெடுத்த தாயை நாங்கள் எவ்வாறெல்லாம் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், சமகாலத்தில் அந்த நிலை முற்றிலும் மாறுபட்டு காணப்படுகின்றது.
இதற்கு எமது சமூகத்தில் இடம்பெறும் ஒரு சில சம்பவங்களே எடுத்துக்காட்டாக இருக்கின்றன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தாய்யொருவரை உணவு கொடுக்காமல் வீட்டில் அடைத்து வைத்து மகள் ஒருவர் கொடுமைப்படுத்திய சம்பவம் கூட இடம்பெற்றிருந்தது.
அந்த வகையில், தற்போது யாழ்ப்பாணத்தில் மகள் ஒருவர் பெற்ற தாயை தாக்கும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றது.
வீதியால் சென்ற தனது தாயை இழுத்துச் சென்று தாக்கும் மகள் ஒருவர் தாக்கும் காட்சி பார்ப்பவர்களை கலங்க வைத்துள்ளது.
மனதில் ஈரமில்லாமல் அவர் செயற்படும் விதம், தாய்மை உணர்வை இழந்து மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரால் தான் இது போன்று நடந்து கொள்ள முடியும் என்று அந்தக் காணொளியைப் பார்த்தவர்கள் கருத்துரைத்திருக்கிறார்கள்.